கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து முனையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும்வேளையில், அதைக்குறித்து அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள், மக்கள் பயன்பாட்டிற்கு முனையத்தை திறப்பதில் தாமதமாகலாம் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது என்னென்ன அடிப்படைத் தேவைகள் என்று ஆய்வு செய்திருக்கின்றனர். அப்போது மக்களுடைய அடிப்படைத் தேவைகள் எதையும் கணக்கிடாமல் இந்தப் பேருந்து முனையம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
ஆகையால், இந்தப் பேருந்து நிலையத்துக்கு உண்டான அணுகு சாலைகள் மற்றும் பேருந்து நிலையத்துக்கு வருகின்ற போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு உண்டான திட்டமிடல் போன்றவற்றை கணக்கிட்டு ஏற்பாடு செய்துக்கொண்டிருப்பதாக அமைச்சர் கூறுகிறார்.
"ஜூன் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்க வேண்டுமென்று முடிவெடுத்தாலும், பேருந்து முனையம் துவக்கப்பட்ட பிறகு மக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முடிந்த அளவு ஏற்பாடுகள் செய்வோம். அவை செய்த பிறகே திறக்க திட்டமிடுகிறோம் அல்லது ஓரிரு வாரங்கள் தள்ளிப்போனாலும் ஜூலை மாத இறுதிக்குள்ளாக நிச்சயமாக இந்தப் பேருந்து முனையத்தை திறப்பதற்குண்டான அனைத்து பணிகளையும் நிறைவு செய்வோம்", என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil