scorecardresearch

கிளாம்பாக்கம் பணிகளை விரைவில் முடிக்க காண்ட்ராக்டர்களுக்கு உத்தரவு: சேகர்பாபு பேட்டி

சென்னையில் புதிதாக வரவிருக்கும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணிகளை விரைவில் முடிக்க ஒப்பந்ததாரர்களை கேட்டுக்கொண்டதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

கிளாம்பாக்கம் பணிகளை விரைவில் முடிக்க காண்ட்ராக்டர்களுக்கு உத்தரவு: சேகர்பாபு பேட்டி

சென்னையில் புதிதாக வரவிருக்கும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணிகளை விரைவில் முடிக்க ஒப்பந்ததாரர்களை கேட்டுக்கொண்டதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

இதைப்பற்றி, தமிழக அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியதாவது: “செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிளம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குத் தயாராகும். கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது”, என்று கூறுகிறார்.

மேலும், “கிளம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகிறது. அப்பகுதியை ஆய்வு செய்து, பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும், திறந்தவுடன் பொதுமக்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படைத் தேவைகள் என்ன என்பது குறித்தும் துறை செயலர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம்.

பணிகளை விரைந்து முடிக்க, துறை சார்பில், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் கேட்டுக்கொண்டோம்,” என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சரான சேகர் பாபு தெரிவித்தார்.

பொங்கலுக்கு முன் இந்த வசதி திறக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் சேகர் பாபு, “முயற்சி செய்யலாம், ஆனால் தேதியை நிர்ணயிக்க முடியாது. இன்றைய ஆய்வின் போது கூட, இந்த முனையத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய பிற புதிய மேம்பாடுகள் குறித்து அதிகாரிகள் எங்களுக்குத் தெரிவித்தனர். சமீபத்திய வெள்ளம் மற்றும் சூறாவளி ஆகியவை பணி தாமதத்திற்கு சில காரணங்களாக இருக்கிறது.

எனவே, அதிகாரிகள் அடிக்கடி சம்பவ இடத்திற்கு வந்து வளர்ச்சியை கண்காணிக்க வேண்டும். கூடிய விரைவில் இந்த முனையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க முயற்சிப்போம்” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kilambakkam bus terminus update minister sekar babu