கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க முதற்கட்டமாக ரூ. 20 கொடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிக கூட்டம் இருப்பதால், இதை குறைக்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிளாப்பாக்கம் செல்ல மக்களுக்கு வசதியாக ரயில் நிலையம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது.
முதல்கட்டமாக கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் அமைக்க ரூ. 20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகளை நிறைவு செய்ய ரயில்வே வாரியத்திற்கு சி.எம்.டி.ஏ கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து ஏற்படும் செலவுகளை கணக்கிக் கொண்டு மற்ற தொகைகள் ஒதுக்க்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் சேகர் பாபு கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார். பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கான வசதிகள் குறைவாக உள்ளதாக புகார் எழுந்த நிலையில், அவர் ஆய்வு செய்தார். வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு போதுமான மாநகர பேருந்துகள் இயக்கப்படுவது பற்றி ஆய்வு செய்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“