Villupuram | TNSTC: விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வருகின்ற 17 ,18, 19 தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 460 பஸ்கள் இயக்கப்படும் என விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார் .
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகின்ற 19.05.2024 அன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் வார இறுதி நாட்களான 17.05.2024 (வெள்ளிக்கிழமை), 18.05.2024 (சனிக்கிழமை) மற்றும் 19.05.2024 (ஞாயிற்றுக்கிழமை) கிழமைகளில் மக்கள் கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வார்கள்.
இதனால் மக்களின் நலன் கருதி, விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக வெள்ளிக்கிழமை 165, பேருந்துகளும் சனிக்கிழமை 200 பேருந்துகளும் (ஞாயிற்றுக்கிழமை) 95, பேருந்துகளும் மொத்தம் 460 சிறப்பு பேருந்துகளை மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இச்சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“