/indian-express-tamil/media/media_files/2025/04/21/rUQsbPpfR4QaL2hkykBW.jpg)
Congress MLA Rajesh kumar
கிள்ளியூர் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ் குமாருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு நிலத்தை அரசு அதிகாரிகள் மீட்க சென்றபோது ஏற்பட்ட தகராறில் அரசு அதிகாரிகள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில், தற்போதைய கன்னியகுமாரி கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவும், தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவருமான ராஜேஷ்குமார் உட்பட 6 பேர் மீது அப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கானது நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேர் உயிரிழந்து விட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், எம்எல்ஏ ராஜேஷ் குமார் உள்பட மூன்று பேர் மீதும் சுமத்தப்பட்ட குற்றம் நிரூபணமானது.
இதையடுத்து காங். எம்.எல்.ஏ ராஜேஷ் குமார் உட்பட 3 பேருக்கு தலா 3 மாதம் சிறை,100 ரூபாய் அபராதம் விதித்து நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹசன் முகமது தீர்ப்பு அளித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.