‘ரவுடி பேபி’ பாடலுக்கு துப்புரவு பணியாளர்களுடன் நடனமாடிய கிரண் பேடி (வீடியோ)

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுடன் பொங்கல் விழா கொண்டாடியுள்ளார். விழாவின்போது மூதாட்டி ஒருவர் ரவுடி பேபி பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். ஆளுநர் கிரண் பேடியும் துப்புரவு பணியாளர்களுடன் நடனம் ஆடி அவர்களை மகிழ்வித்துள்ளார்.

By: Updated: January 17, 2020, 12:41:19 PM

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுடன் பொங்கல் விழா கொண்டாடியுள்ளார். விழாவின்போது மூதாட்டி ஒருவர் ரவுடி பேபி பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். ஆளுநர் கிரண் பேடியும் துப்புரவு பணியாளர்களுடன் நடனம் ஆடி அவர்களை மகிழ்வித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள தமிழகர்களால் பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை பல்வேறு அரசு, தனியார் நிறுவனங்கள், கல்லூரிகளிலும் பொங்கலுக்கு முன் தினமே கொண்டாடப்பட்டது.


அந்த வகையில், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் அம்மாநில பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள், துப்புரவு பணியாளர்களுடன் பொங்கல் பரிசு வழங்கி பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.


இந்த விழாவில், 1500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். விழாவின்போது ஒரு மூதாட்டி, பிரபலமான ரவுடி பேபி பாடலுக்கு நாடனமாடினார். ஆளுநர் மாளிகையில் பொங்கல் பண்டிகையை புதுச்சேரி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் பலரும் நடனம் ஆடி உற்சாகமாகக் கொண்டாடினார். அவர்களை மகிழ்விக்கும் வகையில் கிரண் பேடியும் நடனம் ஆடினார்.


துணைநிலை அளுநர் கிரண் பேடி, பொங்கல் கொண்டாட்டத்தின்போது, மூதாட்டியின் நடனம் ஆடிய வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அதில் அவர், இவர் நம்மை பிபிசிக்கு எடுத்துச் சென்றுள்ளார். ஏன் எடுத்துச் செல்லக்கூடாது? இந்த பெண்மணி தனது வேலையை இதயபூர்வமாக செய்கிறார். அவர் இந்த தருணத்தை அவர் கொண்டாடுகிறார். கொண்டாடுவதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறார். புதுச்சேரி தூய்மையாக வைத்திருக்கும் தூய்மையான நகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Kiran bedi lt governor puducherry celebrates pongal old woman dancing to rowdy baby song

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X