ஐபிஎஸ் ஆக தேர்வானவர்களுக்கு ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐபிஎஸ் தகுதிகாண் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த அகாடமியில் ஐபிஎஸ் பயிற்சி பெற்று வந்த தமிழ்நாடு ஐபிஎஸ் கேடெர் கிரண் ஸ்ருதி 2020ம் ஆண்டுக்கான சிறந்த தகுதிகாண் ஐபிஎஸ் அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார். கிரண் ஸ்ருதி செப்டம்பர் 4ம் தேதி அகாடெமியில் தகுதிகாண் ஐபிஎஸ் பயிற்சியை முடித்தவர்களின் அணிவகுப்பை கட்டளையிடுவார் என்று ஹைதராபாத் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனர் அதுல் கார்வால் தெரிவித்துள்ளார்.
Kiran Shruthi from Tamil Nadu has been declared as the best IPS probationer this year. She will command the passing out parade on September 4: Atul Karwal, Director, Sardar Vallabhbhai Patel National Police Academy, Hyderabad https://t.co/N9rUnjwfXK
— ANI (@ANI) September 2, 2020
செப்டம்பர் 4ம் தேதி ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் அணிவகுப்பு மற்றும் பட்டம் பெறுவதில், 28 பெண் ஐபிஎஸ் உள்பட மொத்தம் 131 ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள ஒப்புக் கொண்டுள்ளதாக அகாடமியின் இயக்குனர் அதுல் கார்வால் தெரிவித்துள்ளார்.
2018ம் ஆண்டு பேட்ச் தமிழ்நாடு ஐபிஎஸ் ஆக தேர்ச்சி பெற்ற கிரண் ஸ்ருதி ஐதராபாத் ஐபிஎஸ் பயிற்சி அகாடமியில் தகுதிகாண் பயிற்சி பெற்று வந்த நிலையில், அவர் ஐபிஎஸ் பயிற்சி அகாடமியின் 2020ம் ஆண்டு சிறந்த ஐபிஎஸ் ஆக அறிவிக்கப்பட்டுள்ளார்.