சென்னையில் LGBTQ சமூகத்தினர் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடக்கி வைத்த கிருத்திகா உதயநிதி, அவர்களுக்கு நிறைய கொடுமைகள் நடந்துள்ளது, அதனை மாற்றும் வகையில் தான் இந்த ஊர்வலம் நடத்தப்படுகிறது என்று கூறியுள்ளார்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் திரைப்பட இயக்குனருமான கிருத்திகா உதயநிதி, சென்னையில் நடந்த LGBTQ சமூகத்தினரின் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடக்கி வைத்தார்.
இதையும் படியுங்கள்: சவுக்கு சங்கர் சிறையில் 3-வது நாளாக உண்ணாவிரதம்; உடல்நிலை பாதிப்பால் மருத்துவ மனையில் சிகிச்சை
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருத்திகா உதயநிதி, சென்னையில் ரூபாரு மிஸ்டர் இந்தியா போட்டி முதன்முறையாக நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும் என நம்புகிறேன். LGBTQ சமூகத்தினரை அனைவரும் ஆதரிக்க வேண்டும். அதற்காக இந்த பேரணி நடைபெறுகிறது. அவர்களுக்கு நிறைய அநீதி நடந்துள்ளது. அவர்கள் நிறைய கஷ்டங்களை அனுபவித்துள்ளனர். அவர்களுக்காக நாங்கள் நிறைய நன்மைகளை செய்துள்ளோம். திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் திருநங்கைகளுக்கு முதன்முதலில் ஓட்டுரிமையைக் கொண்டு வந்துள்ளோம்.
இந்தநிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட LGBTQ சமூகத்தினர், கிருத்திகா உதயநிதிக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் அரசு எடுத்து வரும் முன்னெடுப்புகளை வரவேற்ற அவர்கள், எங்களை இனி ஒதுக்கி வைக்காதீங்க.. மதிச்சு நடத்துங்க என வேண்டுகோள் விடுத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil