பெண் பத்திரிக்கையாளர்கள் மீது அவதூறு – பிரபல நெட்டிசன் கிஷோர் கே சுவாமி கைது!

பத்திரிகையாளர்களுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டுவரும் கிஷோர் கே சுவாமியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

kishore k swamy arrested for women journalists harassment complaint - பெண் பத்திரிக்கையாளர்கள் மீதான விமர்சனம் - பிரபல நெட்டிசன் கிஷோர் கே சுவாமி கைது!
kishore k swamy arrested for women journalists harassment complaint – பெண் பத்திரிக்கையாளர்கள் மீதான விமர்சனம் – பிரபல நெட்டிசன் கிஷோர் கே சுவாமி கைது!

சமூக வலைதளங்களில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க-விற்கு ஆதரவாக பதிவிட்டு வருபவர் கிஷோர் கே சுவாமி.  ஜெயலலிதாவின் அபிமானியாக அறியப்பட்ட இவர், அவர் மறைந்த பிறகு, சசிகலாவின் விசுவாசியானார். பிறகு டிடிவி ஆதரவாளராக ட்வீட்களை பதிவிட்டு வந்த கிஷோர், பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு கட்சியினரையும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்ததாக தெரிகிறது.


குறிப்பாக, பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து மிகவும் மோசமாக பதிவிட்டதாக கூறி, கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி தமிழ்நாடு பெண் பத்திரிக்கையாளர் மையம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் கிஷோர் கே சுவாமி மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் மனுவில், “பெண் பத்திரிகையாளர்களை கண்ணியக்குறைவாகவும் பொதுவெளியில் அவர்களுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூண்டிவிடும் வகையிலும், பத்திரிகையாளர்களுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டுவரும் கிஷோர் கே சுவாமியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த சைபர் க்ரைம் போலிஸார் கிஷோர் கே சுவாமியை நேற்று கைது செய்தனர். இருப்பினும், கைது செய்யப்பட்ட கிஷோரை நேற்று மதியமே சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kishore k swamy arrested for women journalists harassment complaint

Next Story
”அரசியல் இன்றி தனி மனிதனோ விவசாயமோ எதுவுமே முன்னேற முடியாது” – கமல் ஹாசன்Hindu terror remark, delhi high court suspended petition against MNM chief kamalhaasan - சர்ச்சை பேச்சு விவகாரம்: கமலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த டெல்லி ஐகோர்ட்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express