காதலிக்கும் போது கட்டிப் பிடிப்பது, முத்தமிடுவது குற்றமில்லை என்று, காதல் விவகார வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
இளம் வயதினர் காதலிக்கும் போது கட்டிப் பிடிப்பது, முத்தமிடுவது குற்றமில்லை என்று, காதல் விவகார வழக்கு ஒன்றில் தீர்ப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
காதலித்து விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக இளம் பெண் அளித்த புகாரில், இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் தன்னை காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாகவும், காதலிக்கும் போது கட்டிப் பிடித்து முத்தமிட்டார் என இளம்பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் இளம்பெண் அளித்த புகாரின் பேரில் அந்த இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இதுகுறித்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இளம் பருவத்தினர் காதலிக்கும் போது கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது குற்றமாகாது என்று கூறி, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“