சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி, அரசு, தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார், அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா? என்று கேள்விக்கு இது குறித்து அரசு பரிசீலனை செய்து பதில் அளிக்கும் என்று கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமந்திரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமந்திரன் செய்தியாளர் சந்திப்பில். “ இன்று மாலை 5 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை காற்றும் மழையும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை மாநில முதமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். சென்னை மாநகராட்சி மழை நீரை அகற்றும் பணிகளை பார்த்துகொள்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சமந்தபட்ட அமைச்சர்கள் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. மழை தண்ணீரை அகற்ற 214 பம்பு செட்டுகள் தயாராக உள்ளது. 4 நாட்களுக்கு முன்பாகவே புயல் தொடர்பான எச்சரிக்கை வழங்கியதால் மாவட்ட நிர்வாகம், சென்னை மாநகராட்சி தயாரா உள்ளது. கடந்த 3 நாட்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 140 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 572 குடிசைகள் சேதனடைந்துள்ளது” என்று அவர் கூறினார்.
/indian-express-tamil/media/media_files/YxuHEZi1YXWQNou9ZPLa.jpg)
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி, அரசு, தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“