/tamil-ie/media/media_files/uploads/2019/06/tiruchi-kn-nehru-2.jpg)
KN Nehru, Tiruchirapalli KN Nehru, DMK K.N.Nehru Against Congress, கே.என்.நேரு
KN Nehru Slams Congress: காங்கிரசுக்கு எத்தனை நாள் பல்லக்கு தூக்குவது? உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என திருச்சி திமுக ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு பேசினார். காங்கிரஸ் குறைவான இடங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் பேசியதும் குறிப்பிடத்தக்கது.
கே.என்.நேரு, திமுக.வின் குறிப்பிடத்தக்க தலைவர்களில் ஒருவர். திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். தமிழக குடிநீர் பிரச்னையை முன்வைத்து இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. அதையொட்டி திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இப்படி ஆவேசமாக பேசியிருக்கிறார் கே.என்.நேரு.
KN Nehru Slams Congress: காங்கிரஸுக்கு பல்லக்கு தூக்க மாட்டோம்KN Nehru Urges to MK Stalin: திமுக தனித்து போட்டியிட தலைவர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துவேன்
திருச்சியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு பேசியதாவது: உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் . உள்ளாட்சி தேர்தலில் திருச்சியிலாவது திமுக தனித்து போட்டியிட தலைவர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துவேன்.
எத்தனை நாளைக்குத்தான் பல்லக்கு தூக்குவது? பல்லக்கு தூக்கிவிட்டு நாம் வாயில் குச்சி வைத்துக்கொண்டா போவது?’ என ஆவேசமாக கேள்வி எழுப்பியிருக்கிறார் கே.என்.நேரு. சில தினங்களுக்கு முன்பு இதே திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘அடுத்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் குறைவான இடங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்’ என கூறியது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us