தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் கே.என்.நேருவுக்கு உடல் நலக்குறைவு

தேர்தல் பிரச்சாரத்தின்போது உடல்நலக்குறைவு; பிரச்சாரத்தை பாதியிலே முடித்துக் கொண்டு மருத்துவமனை சென்றார் அமைச்சர் கே.என்.நேரு

தேர்தல் பிரச்சாரத்தின்போது உடல்நலக்குறைவு; பிரச்சாரத்தை பாதியிலே முடித்துக் கொண்டு மருத்துவமனை சென்றார் அமைச்சர் கே.என்.நேரு

author-image
WebDesk
New Update
KN Nehr

தேர்தல் பிரச்சாரத்தின்போது உடல்நலக்குறைவு; பிரச்சாரத்தை பாதியிலே முடித்துக் கொண்டு மருத்துவமனை சென்றார் அமைச்சர் கே.என்.நேரு

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

நாடாளுமன்றத் தேர்தல் சூடு பிடித்திருக்கும் நிலையில் வேட்பாளர்களை ஆதரித்து பிரதான கட்சியின் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கரூர் அருகே தனது மகன் அருண் நேருவுக்காக அமைச்சர் கே.என் நேரு பிரச்சாரம் செய்தபோது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பிரச்சாரத்தை கைவிட்டு மருத்துவமனை சென்றார். 

Advertisment

கரூர் அருகே தோகைமலை கொசூரில் அருண் நேருவுக்கு பிரச்சாரம் செய்த சமயத்தில் திடீர் உடல் நலக்குறைவால் பிரச்சாரத்தை கைவிட்டு மருத்துவமனைக்கு சென்றார் அமைச்சர் கே.என்.நேரு.

பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதி பகுதிகளில் தி.மு.க வேட்பாளர் அருண் நேரு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று (புதன்கிழமை) காலை கொசூர் பகுதியில் இருந்து பிரச்சாரம் துவங்கியபோது, நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தனது மகன் அருண் நேருவுக்காக வாக்கு சேகரித்தார்.

அப்போது “எனக்கு மயக்கமாக இருக்கிறது. ஒரு வரி மட்டும் பேசிவிட்டு கிளம்புறேன்” என்று கூறிய அமைச்சர் கே.என்.நேரு, “எனது துறையின் கீழ் வரும் குடிநீர் வாரிய பிரச்சினைகளை இப்பகுதியில் கண்டிப்பாக தீர்த்து வைப்பேன்” எனத் தெரிவித்து முடித்துக்கொண்டு பிரச்சார வாகனத்திலிருந்து கீழே இறங்கி தனது காரில் ஏறி மருத்துவமனைக்குச் சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

க.சண்முகவடிவேல்

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy K N Nehru

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: