Advertisment

மதுரை மாநகராட்சி அம்ரூத் 2.0 திட்டம்: ரூ.471.89 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடைப் பணிகளுக்கு அடிக்கல்

மதுரை மாநகராட்சி அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.471.89 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.

author-image
WebDesk
New Update
KN Nehru laid

மதுரை மாநகராட்சி உத்தங்குடியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு, மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் ரூ.471.89 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.

மதுரை  மாநகராட்சி அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ்    ரூ.471.89  கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கு  
Advertisment
நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
மதுரை மாநகராட்சி உத்தங்குடியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு, மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் ரூ.471.89 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கு                                நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள். 
Advertisment
Advertisement
இந்நிகழ்வில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி  தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையேற்றனர். மேயர் இந்திராணி பொன்வசந்த்  நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு,,  மாவட்ட ஆட்சித் தலைவர்  சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.  
 
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது : 
மதுரை மாநகராட்சி 2011 ஆம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்ட பின்பு 100 வார்டுகள் மற்றும் ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இதில் பழைய 72 வார்டுகளில் பாதாள சாக்கடை கட்டமைப்பு நடைமுறையில் இருந்து வருகிறது.  
புதிதாக இணைக்கப்பட்ட வார்டு பகுதிகளுக்கு பாதாள சாக்கடை கட்டமைப்பு வசதி இல்லாததால், இப்பகுதி பொதுமக்களின் அடிப்படை தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு முதற்கட்டமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.307.78 கோடி மதிப்பீட்டில் வைகை வடகரை பகுதிகளில் உள்ள புதிதாக இணைக்கப்பட்ட வார்டு எண்கள்.1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 11, 13, 15, 17, 18, 19, 20, 33, 34, 37, 38, 39 மற்றம் 40 ஆகிய 22 வார்டுகளில் 360.49 கி.மீ. நீளத்திற்கு கழிவுநீர் குழாய் அமைத்தல்,  14905 எண்ணம் வீட்டு இணைப்பு வழங்குதல் மற்றும் புதிதாக 3 எண்ணம் கழிவுநீரேற்று நிலையம் அமைத்தல் போன்ற பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.  
மேலும், தற்பொழுது இரண்டாம் கட்டமாக வைகை வடகரை பகுதியில் புதிதாக இணைக்கப்பட்ட வார்டுகளில் விடுப்பட்ட பகுதிகளுக்கும், வைகை தென்கரை பகுதிகளில் புதிதாக இணைக்கப்பட்ட வார்டு பகுதிகளுக்கும் புதிய பாதாள சாக்கடை கட்டமைப்பு ஏற்படுத்த அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.471.89 கோடி மதிப்பீட்டில்                                 2 சிப்பங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற உள்ளது.  
சிப்பம் எண்.1 ல் வைகை வடகரை பகுதியில் புதிதாக இணைக்கப்பட்ட வார்டு எண்கள், 1, 4, 5, 6, 7, 8, 9, 11, 13, 15, 17, 18, 19, 36, 40 மற்றும் 41 ஆகிய 16 வார்டுகளில் ரூ.179.09 கோடி மதிப்பீட்டில் விடுப்பட்ட இடங்களில் 215 கி.மீ, நீளத்திற்கு கழிவுநீர் குழாய் பதிக்கவும், 7305 எண்ணம் பாதாள சாக்கடை மெஷின் ஹோல் (Machine Hole) அமைக்கவும், 25,555 வீட்டு இணைப்பு வழங்குவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 
சிப்பம் எண்.2 ல்  வைகை தென்கரை பகுதியில் புதிதாக இணைக்கப்பட்ட வார்டு எண்கள்,41, 84, 86, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99 மற்றும் 100 ஆகிய 15 வார்டுகளில் ரூ.292.80 கோடி மதிப்பீட்டில் 285 கி.மீ. நீளத்திற்கு கழிவுநீர் குழாய் பதிக்கவும், 9795 எண்ணம் பாதாள சாக்கடை மெஷின் ஹோல் (Machine Hole)  அமைக்கவும்,  53672 வீட்டு இணைப்பு வழங்குவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  பேசினார்கள்.
Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment