திருச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் கே.என். நேரு கலந்துகொண்டு பேசினார். “ஒரு டிஎஸ்பி என்னவேண்டுமானாலும் செய்யும் ஆற்றல் பெற்றவர் என்று கூறினார். டிஎஸ்பி ஒருவரை குற்றவாளியாக்கலாம் அல்லது குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்கலாம் என்றும் அவர் கூறினார்.
ஒரு துணைக் காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) எதையும் செய்யும் ஆற்றல் பெற்றவர் என்று திமுக அமைச்சர் கே.என். நேரு கூறியிருப்பது, தமிழக காவல்துறையின் நேர்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், அமைச்சர் கே.என்.நேருவின் இந்த கருத்த காவல்துறையில் இருப்பவர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா என்று புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் திருச்சி ஜீயபுரம் டி.எஸ்.பி பரவாசுதேவனும் கலந்து கொண்டார். அமைச்சர் கே.என். நேரு, டி.எஸ்.பி-யை பாராட்டும் விதமாக, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டி.எஸ்.பி., என்ன வேண்டுமானலும் செய்யும் ஆற்றல் பெற்றவர் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: “இந்த டிஎஸ்பி சப்-இன்ஸ்பெக்டராக இருந்தபோது எனக்கு பாதுகாப்பு பணி செய்தார். அவருக்கு இருக்கக்கூடிய திறமை என்னவென்றால் என்னவேனாலும் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர். அவர் விரும்பினால், ஒருவரை குற்றவாளியாக்குவார் அல்லது ஒருவரை குற்றவாளி பட்டியலில் இருந்து நீக்குவார். அவர் எங்களுடன் வளர்ந்ததால் நான் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை” என்று அமைச்சர் கே.என். நேரு கூறினார்.
அமைச்சர் கே.என். நேருவின் இந்த கருத்து தமிழக காவல்துறையின் நேர்மையைப் பற்றி கேள்வி எழுப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”