Advertisment

'வருங்கால முதல்வர் நீங்கதாண்ணே...' பூமி பூஜையில் புயலை கிளப்பிய புரோகிதர்: அமைச்சர் நேரு அதிர்ச்சி ரியாக்ஷன்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்ற புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில், அமைச்சர் கே.என். நேருவை பார்த்து 'வருங்கால முதல்வர் நீங்கதாண்ணே...' என்று புரோகிதர் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
KN Nehru Srirangam New Bus stand bhoomi pooja Next TN CM comment by priest Tamil News

ஶ்ரீரங்கத்தில் ரூபாய் 11.10 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.

K-n-nehru | srirangam: 108 வைணவ தளங்களில் முதன்மையானதாகவும், 'பூலோக வைகுண்டம்' என்றும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் போற்றப்படுகிறது. இக் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர். 

Advertisment

உலக பிரசித்தி பெற்ற ஶ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இறங்கி செல்ல ஏதுவாக இன்றைய தினம் வரை பேருந்து நிலையம் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இப்பகுதியில் மட்டும் சுமார் 1லட்சத்து 20 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

ஆனால் ஸ்ரீரங்கத்தில் இதுவரை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள், சுற்றுலா பேருந்துகளுக்கு என தனியாக பேருந்து நிலையம் இல்லை. இங்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது இதனால் ஸ்ரீரங்கத்தில் உள்ளூர் பேருந்து நிலையம் கட்டப்பட வேண்டும் என அப்பகுதி மக்களின் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்திருந்தனர்.

இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின் பெயரில் ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஶ்ரீரங்கத்தில் ரூபாய் 11.10 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மூலதன மானிய நிதி 2023-24 ன் கீழ் ரூபாய் 11.10 கோடி திட்ட மதிப்பீட்டில் ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கான தொடக்க விழா மற்றும் பூமி பூஜையும் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, திமுக பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புயலை கிளப்பிய புரோகிதர்

இந்நிலையில், ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்ற புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழாவில், 'வருங்கால முதல்வர் நீங்கதாண்ணே...' என்று கூறி புயலை கிளப்பினார் புரோகிதர். அதற்கு அமைச்சர் கே.என். நேரு அதிர்ச்சி ரியாக்ஷன் கொடுத்தார். பூமி பூஜையின் போது புரோகிதர், "நீங்க நினைச்சது எல்லாமே நடக்கும்ண்ணே... நீங்கதாண்ணே வருங்கால முதல்வரரே... அண்ணே எங்களது" என்று கூறினார். உடனே அதிர்ச்சி அடைந்த அமைச்சர் கே.என். நேரு சற்று அமைதியாக இருக்கும் படி கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

K N Nehru srirangam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment