திமுக முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக சென்னையில் தனையார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் 9 மாதங்களாக உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி போட தொடங்கிய இங்கிலாந்தில் மாறுபட்ட கொரோனா வைரஸ் பரவிவருவதால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். பல நாடுகள் இங்கிலாந்துக்கு விமானப் போக்குவரத்துகளை நிறுத்தியுள்ளன.
இந்தியாவில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் முன்களப் பணியாளர்கள் என பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இவரகள் மட்டுமில்லாமல், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
அந்த வரிசையில், முன்னாள் அமைச்சரும் திமுகவின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவுக்கு அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து, பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"