scorecardresearch

தி.மு.க. கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ: கே.என் நேரு பேச்சு

தி.மு.க. கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ இணைய வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் கே.என். நேரு கூறினார்.

KN Nehrus speech at Trichy DMK Public meeting
திருச்சி திமுக பொதுக் கூட்டத்தில் கேஎன் நேரு பேச்சு

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், மக்களவைத் தேர்தலுக்குத் தயார்படுத்தும் வகையில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

அப்போது பேசிய அமைச்சர் கே.என். நேரு, “தி.மு.க. கூட்டணியில் கூடுதலாக எஸ்.டி.பி.ஐ கட்சி இணையலாம். அது தேர்தல் நேரத்தில்தான் தெரியும்” என்றார்.

தொடர்ந்து, மக்களவை தேர்தல் குறித்து பேசிய அமைச்சர் கே.என். நேரு, “திமுகவுக்கு வெற்றியை அளித்து மக்கள் மு.க. ஸ்டாலினுக்கு வெகுமதி அளிப்பார்கள்” என்றார்.

இதையடுத்து திராவிட மாதிரி காலாவதியாகிவிட்டது என்ற தமிழக ஆளுனர் ஆர்.என். ரவியையும் விமர்சித்துப் பேசினார். திமு.க. கூட்டணியில், காங்கிரஸ், இடதுசாரிகள், இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kn nehrus speech at trichy dmk public meeting

Best of Express