இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், தைப்பொங்கல் 2024-ம் ஆண்டு குடும்ப அட்டைதத்தாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது.
இந்தப் பொங்கல் பரிசு 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக 238 கோடியே 92 லட்சத்து 72 ஆயிரத்து 741 ரூபாய் செலவாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
எனினும் கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டு ரூ.1000 ரொக்கம் முதலில் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது ரொக்கப் பரிசு ரூ.1000 அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 கோடியே 15 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ரூ. 1000 தொகை பொங்கல் திருநாளை முன்னிட்டு இம்மாதம் 10ம் தேதியே தொகை வரவு வைக்கப்படும்” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் யாருக்கு கிடைக்கும்?
இந்தப் பொங்ல் பரிசு ரூ. 1000 ரொக்கத் தொகை அரிசி அட்டைத் தாரர்களுக்கு மட்டும் கிடைக்கும். அதாவது ரேஷன் அட்டைகளில் PHH, PHH-AAY (அந்தோதயா அன்ன யோஜனா) மற்றும் NPHH எனப்படும் ரேஷன் காடுகளை கொண்டவர்களுக்கு கிடைக்கும்.
யார் யாருக்கெல்லாம் கிடைக்காது?
அதேநேரம் NPHH-5 எனப்படும் ரேஷன் கார்டுகளை கொண்டுள்ள நபர்களுக்கு கிடைக்காது. மேலும் வரி கட்டுவோருக்கு பொங்கல் பரிசு கிடைக்காது. வரி கட்டுவோருக்கு பொங்கல் பரிசு வழங்கப்படாதது இதுவே முதல் முறையாகும்.
நிதி நெருக்கடி
தமிழ்நாடு அரசு நிதி நெருக்கடியில் தவிக்கும் நிலையில் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, ரேஷன் அரிசி அட்டைதாரர்கள் உள்பட வரி செலுத்தியோருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“