லேடி லாலி வார்டு மருத்துவமனையை பாரம்பரிய கட்டிடம் என்று இந்திய தொல்லியல் துறை அறிவித்தது.
வித்யா கௌரி வெங்கடேஷ்
Advertisment
Know your city: பொதுவாக நமக்கு மதிப்பு சேர்க்கும் விஷயங்களை புறக்கணிப்பது மனிதருடைய வழக்கம். அதைப்போல, நம்மூரிற்கு மதிப்பு சேர்க்கும் வரலாற்றையும் கட்டிடங்களையும் பொதுமக்கள் கவனிப்பது அரிதான ஒன்று.
அப்படிப்பட்ட வரலாற்று மிக்க கட்டிடத்தை சென்னை எழும்பூரையும் நுங்கம்பாக்கத்தையும் இணைக்கும் இடமான மார்ஷல்ஸ் சாலையில் உள்ளது.
Advertisment
Advertisements
எழும்பூரில் உள்ள மார்ஷல்ஸ் சாலை (அல்லது ருக்மணி லக்ஷ்மிபதி சாலை) வழியாக நடந்து சென்றால், சாலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களின் எண்ணிக்கையையும் அழகையும் ரசித்து மகிழும் வாய்ப்பு கிடைக்கும்.
இங்கிலாந்தில் உள்ள மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பழமையான மருத்துவமனையாக இதைக் கருதுகின்றனர்.
1819ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கண் மருத்துவமனை சென்னை எழும்பூரில் உள்ளது. "இந்திய தொல்லியல் துறை இந்த லேடி லாலி வார்டு மருத்துவமனையை பாரம்பரிய கட்டிடமாக அறிவித்தது. எலியட்டின் கண் மருத்துவ அருங்காட்சியகத்தில் பல அரிய மாதிரிகள், வழக்குப் பதிவேடுகள், மருத்துவ கருவிகள் மற்றும் கண் நோய்களின் ஓவியங்கள் உள்ளன.
'மெட்ராஸ் ஐ' ஏற்படுத்தும் வைரஸ் இங்கே கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கண்காணிப்பாளரான ஆர்.எச். எலியட், கிளௌகோமா அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் எலியட்ஸ் ட்ரெஃபைன் என்ற கருவியை சிகிச்சைக்கு பயன்படுத்தியுள்ளனர்.
சுதந்திரப் போராட்ட வீராங்கனையான ருக்மணி லட்சுமிபதியின் நினைவாக மார்ஷல்ஸ் சாலையின் பெயர் மாற்றப்பட்டது.
வெப்பமண்டலத்தினால் ஏற்படும் கண் நோய்களால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வீரர்களுக்கு சேவை செய்வதற்காக இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது. இன்று ஒரு சிறந்த மையமாக உள்ளது, ”என்று சென்னையை சேர்ந்த சுதா உமாசங்கர், சமூக ஆர்வலர் கூறுகிறார்.
1930ல் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீராங்கனையான ருக்மணி லட்சுமிபதியின் நினைவாக மார்ஷல்ஸ் சாலையின் பெயர் மாற்றப்பட்டது.
சென்னை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி மற்றும் பொது சுகாதாரத் துறை அமைச்சராகப் பணியாற்றிய பெருமையும் அவருக்கு உண்டு. இந்த சாலையில் ருக்மணி லட்சுமிபதியின் சிலை உள்ளது.
சுதா உமாசங்கர், பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் இந்திய வீடுகளை விட்டு வெளியேற மாட்டார்கள் என்பது பொதுவான அனுமானமாக இருந்தது, ஆனால் 1911ஆம் ஆண்டு லேடீஸ் ரிக்ரியேஷன் கிளப் மூலம் அவர்களுக்காக உருவாக்கினர்.
சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில், இந்திய பெண்கள் தங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடவும், அரட்டை அடிக்கவும், சீட்டாட்டம் அல்லது பேட்மிண்டன் விளையாட்டை விளையாடவும் இந்த கிளப்புக்கு குதிரை வண்டிகள் மூலம் பயணம் செய்து வந்தனர்.
கிளப்பின் பெயர் தலைவர்களில் ஒருவரும் ஆளுநரின் மனைவியுமான லேடி வில்லிங்டனின் நினைவாக பெயரிடப்பட்டது. "வில்லிங்டன் லேடீஸ் கிளப் என்றும் அழைக்கப்படும் கிளப்பில் பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் மற்றும் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கான வசதிகள் இருந்தன. மேலும், அதன் கிறிஸ்துமஸ் பார்ட்டிகள் மிகவும் பிரபலமாக இருந்தன.
செயின்ட் அந்தோனி தேவாலயம்
இந்தியப் பெண்கள் புடவையில் விளையாடுவதைக் காட்டும் படச் சான்றுகள் வரலாற்றுப் புத்தகங்களில் உள்ளன,” என்கிறார் சுதா. அந்தச் சொத்து இப்போது செட்டியார் குடும்பத்துக்குச் சொந்தமானது. இருப்பினும், தி வில்லிங்டன் எஸ்டேட் என்ற வணிக வளாகம் இன்னும் அதே இடத்தில் உள்ளது.
"கடைசியாக, ரோமன் கத்தோலிக்க தேவாலயமான செயின்ட் அந்தோனி தேவாலயம், அதன் கிரேக்க-ரோமன் கட்டிடக்கலை, இத்தாலிய மொசைக் மற்றும் கறை படிந்த கண்ணாடி ஆகியவை இந்த சாலையில் உள்ள மற்றொரு தளமாகும்.
1921 இல் அடிக்கல் நாட்டப்பட்டது, ஆனால் அதற்கு முன்பே இப்பகுதி ஒரு திருச்சபையாக அறிவிக்கப்பட்டது. அயர்லாந்தைச் சேர்ந்த பிரசன்டேஷன் சகோதரிகளால் நடத்தப்படும் ஒரு பாரிஷ் பள்ளி, சென்னையில் பல பள்ளிகளை நடத்துகிறது. இது ஏழை ஆங்கிலோ-இந்தியன் குழந்தைகளுக்கு சேவை செய்யத் தொடங்கியது. அது இப்போது கணிசமான அளவு வளர்ந்துள்ளது மற்றும் தொடர்ந்து கல்வியை வழங்குகிறது,” என்று அவர் கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil