கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சென்னை உள்பட இந்தியாவின் பல பகுதிகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவைச் சேர்ந்த மாணவியிடம் இருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல்களை சென்னையில் வசிக்கும் ஒரு இரத்த புற்றுநோய் நோயாளிக்கு தானமாக அளிக்கப்பட உள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இத்தாலி, லண்டன், ஈரான், பல நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடியதோடு மக்கள் நடவடிக்கைகளை முடக்கியுள்ளது. அதே போல, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவிலும் இதே நிலைதான்.
இப்படி ஒட்டுமொத்த நாடும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக இருக்கும் நிலையில், கேரள மாநிலம், கொச்சியில் உள்ள செயிண்ட் தெரெசா கல்லூரியில் படிக்கும் 18 வயது மாணவியிடமிருந்து பெறப்பட்ட ஸ்டெம் செல்கள் சென்னையில் வசிக்கும் ஒரு ரத்தப் புற்றுநோய் நோயாளிக்கு அளிக்கப்பட உள்ளது.
செயிண்ட் தெரெசா கல்லூரி மாணவியின் ஸ்டெம் செல்களை கொச்சியிலிருந்து மருத்துவர்கள் கொண்டுவருவார்கள். டாட்ரி ஊழியர் ஒருவர் கொச்சியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்ட செல்களை சாலை வழியாக சென்னை மருத்துவமனைக்கு கொண்டு வருவார்.
இது குறித்து டாட்ரி நடவடிக்கை குழுவின் தலைவர் சேதுக்கரசி ஊடகங்களிடம் கூறுகையில், “வேறு போக்குவரத்து வழிகள் இல்லாததால் இதற்காக நாங்கள் அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றுள்ளோம். இதற்கு எங்களுக்கு சுமார் 12 மணி நேரம் செய்ய வேண்டியது இருக்கும். ஸ்டெம் செல்களைப் பெறுபவரின் மருத்துவ நிலை காரணமாக இதை ஒத்திவைக்க முடியாது என்று மருத்துவர்கள் எங்களிடம் கூறியுள்ளனர்” என்று தெரிவித்தார்.
இரத்த புற்றுநோய், தலசீமியா மற்றும் பிற ஆபத்தான இரத்தக் கோளாறுகளுக்கு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை ஒரு நிலையான சிகிச்சையாகும். ஸ்மைல்மேக்கர்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து டட்ரி நடத்திய ஆட்சேர்ப்பு முகாமின் போது டீன் ஏஜ் பெண் ஒருவர் அக்டோபர் 29-ம் தேதி நன்கொடைக்காக பதிவு செய்தார்.
ஸ்டெம் செல் தானமாக அளிப்பவர்கள் 18-50 வயது குழுவினராக இருக்கிறார்கள். அந்த தன்னார்வலர்களிடம் இருந்து ஸ்டெம் செல் சேகரிக்கப்பட்டு ஹெச்.எல்.ஏ. வகையான ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, சில மாதங்களிலேயே டாட்ரி பெண்ணின் ஸ்டெம் செல்களுக்கு இடையே பொருத்தத்தை கண்டறிந்தது. அந்த பெண்ணின் குடும்பத்தினரும் ஸ்டெம் செல் தானம் அளிக்க முழு ஆதரவுன் இருதனர். நாளை ஸ்டெம் செல்கள் எடுத்துச்செல்லப்படுகிறது என்று சேதுக்கரசி கூறினார்.
மேலும், ஸ்டெம் செல் தானம் அளிப்பதற்காக மருத்துவமனைக்குச் செல்லும்போது கொடையாளரின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் டாட்ரி குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட கொடையாளர்களைக் கொண்ட டாட்ரி பிப்ரவரியில் 710 ரத்த ஸ்டெம் செல் தானங்களை நடத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா களேபரத்தில் இருக்கும் நிலையில் கேரளாவைச் சேர்ந்தவரின் ஸ்டெம் செல்கள் சென்னையில் வசிக்கும் ரத்தப் புற்றுநோய் நோயாளிக்கு தானமாக அளிக்க உள்ள நிகழ்வு கவனத்தைப் பெற்றுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Kochi stem cell donor help to chennai blood cancer patient in amid of lockdown for covid
ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா : மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்
செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு பாடங்களில் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் : டிஆர்டிஓ அறிவிப்பு
‘நாங்கள் ஆச்சரியப்படவில்லை, அவருடைய திறனைப் பற்றி அறிந்திருந்தோம் : வாஷிங்டன் சுந்தரின் தந்தை