scorecardresearch

கொடைக்கானலில் பயங்கரம்: 10 ஆம் வகுப்பு மாணவர்கள் இடையே ஏற்பட தகராறில் ஒரு மாணவர் கொலை.

தன்னையும் தனது குடும்பத்தினரையும் தவறாகப் பேசிய சக மாணவன் தாக்கியதாக தகவல்

tamil nadu news today live
tamil nadu news today live

kodaikanal student murder : கொடைக்கானலில் உள்ள பள்ளியில் சக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் ஒரு மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த இரண்டு மாணவர்கள் பள்ளியின் விடுதியிலேயே தங்கி வந்துள்ளனர். முதலில் நண்பர்களாக இருந்த இரண்டு மாணவர்களும் பிறகு அவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக பிரிந்து இருந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று இரண்டு மாணவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அதில் ஒரு மாணவரான கபில் ராகவேந்திரா கழிப்பறைக்குச் சென்றபோது, அவரை மற்றொரு மாணவர் கத்திரிக்கோல் மற்றும் கிரிக்கெட் ஸ்டம்பால் தாக்கிவிட்டு விடுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர் கபில் ராகவேந்திரா மயங்கி விழுந்துள்ளார். இதனை அறிந்த, பள்ளியின் விடுதி காப்பாளர் அவரை மீட்டு கொடைக்கானலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கே மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்தாக தெரிவித்தனர். இதையடுத்து, கொலையான மாணவர் கபில் ராகவேந்திராவின் தந்தை ஒசுரில் உள்ள சதீஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்து.

கபில் ராகவேந்திராவை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய அந்த மாணவர், கொடைக்கானல் சாலையில் தனியாக சுற்றித் திரிந்துள்ளார். அப்போது, அங்கே ரோந்து சென்ற போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தில், தன்னையும் தனது குடும்பத்தினரையும் தவறாகப் பேசிய சக மாணவன் கபில் ராகவேந்திராவை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே மாணவரின் கொலை குறித்து பள்ளி முதல்வர் அளித்த புகாரின் பேரில் கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், கொலை செய்த மாணவரை கைது செய்தனர்.

2 மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கொடைக்கானல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் சுரேந்திரன், வட்டாட்சியர் வில்சன் மற்றும் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kodaikanal student murder 10th student murdered by friend