நீலகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளை முயற்சி நடந்தது. இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் சயன், கேரளத்தைச் சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீஷன், உதயகுமார், ஜிதின் ஜாய், ஜம்ஷேர் அலி, வாளையாறு மனோஜ், மனோஜ் சாமி மற்றும் குட்டி என்கிற பிஜின் ஆகிய 10 பேரை கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் இந்த வழக்கை கோவை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபு மற்றும் உதயகுமாரை கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று (ஜூலை 25) கோவை சிபிசிஐடி போலீசார் அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.
தொடர்ந்து ஜித்தின் ஜாய் மற்றும் ஜம்ஷீர் அலி ஆகியோரை வரும் 30ஆம் தேதி கோவையில் உள்ள சிபிசிஐடி போலீசார் அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“