கொடநாடு கொலை, கொள்ளை நடைபெற்ற போது பதிவான தொலைபேசி பதிவுகளை சேகரிப்பதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாக சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் உள்ள ஜெயலலிதா அவரது தோழி சசிகலா பங்களாவில் கடந்து 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கில் சயான், வாளையார் மனோஜ், சம்சீர், மனோஜ் சாமி, ஜித்தன் ஜாய் உட்பட 10 பேர் கோத்தகிரி காவல துறையினர் கைது செய்தனர்.
இது தொடர்பாக வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் கோவையில் முகாம் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், முன்னாள் பாதுகாப்பு அதிகாரி வீரப்பெருமாள், பெருமாள் உள்பட 300க்கும் மேற்பட்டவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்நிலையில் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைதான கேரளாவை சேர்ந்த சயானிடம் சில கேள்விகள் கேட்க சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர். இதை அடுத்து அவரை கடந்த 17 ஆம் தேதி நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் சில காரணங்களுக்காக தன்னால் அன்றைய தினம் ஆஜராக முடியவில்லை என்று சயான் தரப்பில் காவல் துறையிடம் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் வியாழக்கிழமை கோவையில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.
அதுபோன்று கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை செய்து வந்த தினேஷ் குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கோத்தகிரி சேர்ந்த கர்சன் செல்வம் என்பவம் தற்பொழுது கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார் அவரிடம் தற்பொழுது போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கூறும்போது :
கொடநாடு கொலை, கொள்ளை நடைபெற்ற போது பதிவான தொலைபேசி பதிவுகளை சேகரிப்பதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாகவும், மேலும் வெளிநாட்டில் இருந்து வந்த இரண்டு தொலைபேசி அழைப்புகள் சமூக வலைதள செயலி மூலமாக பேசி உள்ளதாகவும் அதனையும் சேகரிப்பதில் சிக்கல் உள்ளதாக தெரிவித்த சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர். மேலும் பி.எஸ்.என்.எல் பதிவுகளை இரண்டு ஆண்டுகளுக்குள் பதிவாகும் பதிவுகளை மட்டும் எளிதில் பெற முடியும் என்றும் கொலை, கொள்ளை சம்பவம் நடந்து 8 ஆண்டுகள் கடந்த நிலையில் அதை பெறுவதிலும் சட்ட சிக்கல்கள் உள்ளதாகவும், தெரிவித்தவர்கள் .
தற்பொழுது கொடநாடு ஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்த தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கோத்தகிரி சேர்ந்த கர்சன் செல்வத்திடம் இன்று விசாரணை நடந்து உள்ளது,
சம்பவம் நடைபெற்ற அன்று காலையில் எஸ்டேட்க்குள் கரிசன் செல்வராஜ் நடைப்பயிற்சி சென்று கொண்டு இருந்ததாகவும், அப்பொழுது ஆங்காங்கே ஆட்கள் நின்று கொண்டு இருப்பதை இவர் பார்த்ததாகவும், காவல் துறையினரிடம் தெரிவித்ததாகவும் சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்பொழுது அவரிடம் கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் தற்போது விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.