நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் உள்ளூர் போலீஸார் நடத்திய விசாரணையின் போது தனிப்படையில் இருந்த உதவி ஆய்வாளர்கள் விஜயகுமார், வேலுசாமி, மகேஷ் குமார் ஆகியோருக்கு நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதே போல், இந்த எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை செய்துவந்த ஊழியர் தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாகவும் போலீஸார் தனியாக விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கில் தினேஷ் குமார் தொடர்பாக விசாரணை நடத்த, அவர் தற்கொலை செய்து கொண்டபோது ஆம்புலன்சில் ஏற்றிச்சென்ற டிரைவர் கபீர், கோடநாடு பகுதியை சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி சங்கர் ஆகியோரும் தொடர்பில் இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று முன் தினம் காவலர் மகேஷ் குமார் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
/indian-express-tamil/media/media_files/2025/02/27/gZR6f6uBAmesQB47uSEB.jpg)
இந்நிலையில் அ.தி.மு.க நிர்வாகி சங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்த நிலையில், இன்று அவர் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
கொடநாடு மேலாளர் நடராஜனிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் கடந்த மாதம் சம்மன் வழங்கினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து விரைவில் அவருக்கும் சம்மன் வழங்கி நேரில் அழைத்து விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.