கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக நமது அம்மா நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜிடம் போலீசார் விசாரணை நடத்த சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்த நிலையில்,
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் அழகுராஜாவிடம் தனிப்படை போலீசார் கோவையில் விசாரணை நடத்தினர்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக பல்வேறு நபர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த வகையில், கொடநாடு கொலை – கொள்ளை வழக்கு சம்மந்தமாக விசாரிக்க போலீசார் அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டட்டது.
இதனை தொடர்ந்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் முன்னிலையில் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து மருது அழகுராஜூவிடம் இன்று (சனிக்கிழமை) விசாரணை நடத்தினர்.
முன்னதாக மருது அழகுராஜ், கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். அந்தக் கருத்துக்களின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அப்போது, 'எடப்பாடி பழனிச்சாமியின் வலதும் இடதுமாக இருந்து வரும் சேலம் இளங்கோவனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றவாளிகள் உறுதிப்படுத்துகிற தகவல் வெளியானது' என மருது அழகுராஜ் கூறியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் போலீசார் மருது அழகுராஜிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர் ரகுமான் கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“