கொடநாடு கொலை விவகாரத்தில் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு காந்திரஸ் கட்சி அளித்தது.
கொடநாடு கொலை விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த மர்ம மரணங்களுக்கு பின்னணியில் யார் இருக்கிறார் என்பது போன்ற ஆவணப் படம் ஒன்றை வெளியிட்டார்.
ஆளுநர் மாளிகை முன்பு திமுக போராட்டம்
அந்த ஆவணப் படத்தில் தமிழக முதல்வர் தான் இந்த கொலைக்கு காரணம் என்றவாரு நேரடியா குற்றஞ்சாட்டி இருந்தார் மேத்யூஸ். இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக முதல்வர் பழனிச்சாமி இந்த குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று, பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இது குறித்து ஆளுநரையும் முன்னதாக அவர் சந்தித்தார்.
மு.க. ஸ்டாலின் மட்டுமின்றி, அதிமுகவின் முக்கிய பிரதிநிதிகளும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து கொடநாடு கொலை விவகாரத்தில் முதல்வர் பழனிசாமியின் பெயர் இடம்பெற்றிருப்பது பற்றி பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், முதல்வர் பெயருக்கு கலங்கம் விளைவிக்கவே இத்தைகய பழியை போட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக கோரி போராட்டம் நடத்த போவதாக ஸ்டாலின் அறிவித்ததையடுத்து இன்று காலை சென்னையில் உள்ள ஆளுநர் மாளையை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம் நடத்தினர். திமுக சார்பாக இன்று நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. திமுகவை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.