scorecardresearch

தலைவர் வீடு தேடிச் சென்ற கொல்கத்தா வீரர்கள்: செம்ம ஹேப்பி அண்ணாச்சி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ அவரது இல்லம் தேடி சந்தித்தனர்.

Kolkata Knight Riders players who met Rajinikanth in house
ரஜினிகாந்த் வீடு தேடிச் சென்று சந்தித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள்

ஐ.பி.எல். 2023 கிரிக்கெட் தொடரில், 4 ஆவது இடத்தை கைப்பற்ற பெங்களூரு, ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப், லக்னோ அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

முன்னதாக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னையை துவம்சம் செய்தது.

இதனால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு அந்த அணி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கொல்கத்தாவில் நடைபெறவுள்ள லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி பெற்று, மற்ற அணிகள் தோல்வியுறும்பட்சத்தில் கொல்கத்தாவுக்கு அந்த பிளே ஆஃப் அதிருஷ்டம் வர வாய்ப்புகள் உள்ளன.

இந்த நிலையில் கொல்கத்தா வீரர்கள் வெங்கடேஷ் மற்றும் சக்கரவர்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ சந்தித்து அவருடன் சிறிது நேரம் உரையாடினர்.
இந்தப் புகைப்படங்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளன. அதில் “எங்கள் வீரர்கள் தலைவா உடன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kolkata knight riders players who met rajinikanth in house