கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரியும், இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரியும், கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கீர்த்தி வர்மன், தமிழ்ச்செல்வன், செய்யத், அஷ்வந்த், ஹரீஷ், வைஷ்ணவ், தருண் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட முதுகலை மருத்துவ மாணவர்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதுகலை மருத்துவ மாணவி கீர்த்தி வர்மன், "கொல்கத்தா மருத்துவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நாங்கள் ஒரு நாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைகளில் ஒருங்கிணைப்பு குழுக்கள் மற்றும் விசாகா குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும், மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.என தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“