அ.தி.மு.க பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கினங்க, திருச்சி புறநகர் தெற்கு, வடக்கு அ.தி.மு.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து நாளை (செப்.4) திருச்சி நெ.1 டோல்கேட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலும், முன்னாள் எம்.பி., ப.குமார் முன்னிலையிலும் நடைபெறுகின்றது.
தி.மு.க ஆட்சியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தடுப்பு சுவர் அமைத்து ஒரு சில மாதங்களில் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய சட்டமன்ற தொகுதியை சார்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை ஒன்றினை கட்டித் தர வலியுறுத்தியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கின்றது.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தினை ஆய்வு செய்தனர்.
முன்னதாக, வரும் 7-ம் தேதி நடத்துவதாக இருந்த ஆர்ப்பாட்டம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை நடக்கவிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“