இடிந்து விழுந்தது கொள்ளிடம் பாலம் : இன்னும் சில நாட்களுக்குள் மொத்த பாலமும் இடிந்து விழும் அபாயம்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டத்தால் மொத்த பாலமும் நீருக்குள் மூழ்கும் அபாயம்

கொள்ளிடம், கொள்ளிடம் பாலம்
கொள்ளிடம்

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இரும்புப் பாலம் ஒன்று பொது மக்கள் பயன்பாட்டிற்காக விடப்பட்டிருந்தது. இரும்புப் பாலம் என்பதால் காலப்போக்கில் கனரக வாகனங்கள் பயன்படுத்த இயலாமல் போனது.

அதற்கு இணையாக அருகிலேயே புதிய பாலம் ஒன்று தமிழக அரசால் கட்டப்பட்டது. இரும்புப் பாலத்தில் அவ்வபோது பொதுமக்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டிக் கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உடைந்து விழுந்தது கொள்ளிடம் பாலம்

கர்நாடகா மாநிலத்தில் தொடர் மழை காரணமாக கர்நாடகா மற்றும் தமிழக அணைகளில் நீர் மட்டம் கடகடவென உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இது குறித்து முக ஸ்டாலின் நேற்று பதிவிட்ட ட்விட்டர் செய்தியைப் படிக்க

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு 2 லட்சம் கன அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து கொள்ளிடம் பழைய பாலத்தின் 18ம் தூணில் விரிசல் ஏற்பட்டது.

நேற்று நள்ளிரவு நீரின் ஓட்டத்திற்கு ஈடு தர முடியாமல்  பாலத்தின் 18வது தூண் நீருக்குள் மூழ்கியது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த 20 நிமிடங்களில் 19வது மட்டும் 20வது தூண் நீருக்குள் மூழ்கியது.

கொள்ளிடத்தில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் மொத்த பாலமும் இடிந்து விழும் இடிந்து விழுந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்து காவேரி டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kollidam old bridge broken down due to heavy rainfall

Next Story
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரஜினிகாந்த் நிதியுதவி!ரஜினிகாந்த் நிதியுதவி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com