தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட பூண்டி மாதா பேராலயத்திற்கு வேளாங்கண்ணி வருபவர்கள் எல்லோரும் அங்கே சென்று பிரார்த்தனை செய்வது வழக்கம். தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ். இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிரதீவ் ராஜ், பிரவீன் ராஜ், தாவீது, ஈசாக், தெர்மஸ் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் பூண்டி மாதா பேராலயத்தில் பிரார்த்தனை செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை வந்தனர்.
Advertisment
பின்னர், மாதாவை தரிசனம் செய்த அவர்கள் இரவில் அங்கேயே தங்கினர். இந்த நிலையில் நேற்று காலை சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் உள்பட 6 பேர் மாதா கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர். திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் அவர்கள் 6 பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
கொள்ளிடம் ஆறு
இது குறித்து தகவல் அறிந்த திருக்காட்டுபள்ளி தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து 6 பேரையும் தேடினர். இதில் சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன் ராஜ் மற்றும் தாவீது ஆகிய 4 பேரை சடலமாக மீட்கப்பட்டனர்.
Advertisment
Advertisements
இன்று தெர்மஸ், ஈசாக் ஆகியோர் இன்று சடலமாக மீட்கப்பட்டனர். 6 பேரின் உடலும் திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆன்மிக சுற்றுலாவுக்கு வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ஒரே நேரத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் அப்பகுதி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“