Advertisment

திருச்சி கொள்ளிடம் தடுப்பணை உடைப்பு; மின் விநியோகம் நிறுத்தம்; போக்குவரத்துக்கு தடை

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ள நீரின் வேகத்தில் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பாலத்தின்கீழே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் இடிந்து அடித்துச் செல்லப்பட்டது. அதேபோல் மின் கோபுர தூண்களின் அடிச்சுவர்களும் அரித்துக் கொண்டிருக்கின்றன.

author-image
WebDesk
New Update
saaasa

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ள நீரின் வேகத்தில் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பாலத்தின்கீழே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் இடிந்து அடித்துச் செல்லப்பட்டது. அதேபோல் மின் கோபுர தூண்களின் அடிச்சுவர்களும் அரித்துக் கொண்டிருக்கின்றன. இது குறித்த விபரம் வருமாறு;
ஸ்ரீரங்கம் - நம்பர்.1 டோல்கேட் இடையே கொள்ளிடம் ஆற்றில் உள்ள நேப்பியர் புதிய பாலத்தின் அருகே, பழைய பாலம் இருந்த இடத்தில் மண் அரிப்பை தடுக்க ரூ.7.50 கோடி செலவில் கடந்த ஆண்டு தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேல் அணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் ஆர்ப்பரித்துச் செல்லும் தண்ணீரின் வேகத்தில் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பாலத்தின் கீழே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் இடிந்து தண்ணீர் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. தண்ணீர் அதிக அளவில் செல்வதால் இந்த தடுப்புச் சுவர் எவ்வளவு நீளத்துக்கு உடைந்துள்ளது என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. 
மேலும், கொள்ளிடம் ஆற்றுக்குள் உயர் மின்னழுத்த கோபுரம் சாயும் நிலையில் இருப்பதால் திருவானைக்காவல் உள்ளிட்ட பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகே , ஒரு லட்சத்து 10 ஆயிரம் மெகாவாட் (110 கேவி) உயர் மின்னழுத்த ராட்சத கோபுரத்தின் அடிப்பகுதி, கொள்ளிடம் ஆற்றில் மிகுதியாக வரும் வெள்ளம் காரணமாக அரித்துச் செல்லப்பட்டது.
எப்போது வேண்டுமானாலும் மின்கோபுரம் விழும் அபாய நிலையை எட்டி உள்ளதால், திருவானைக்காவல் உள்ளிட்ட பகுதியில் காலை 7 மணியிலிருந்து மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், கொள்ளிடம் ஆற்றில் உள்ள ராட்சத கோபுரத்திற்கு செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது. மாற்று வழியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீரங்கம் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொள்ளிடம் ஆற்றில் செல்லும் நீரின் அளவை தற்போது உன்னிப்பாக அரசு அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்.

Advertisment

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாகவும், உயர் மின் அழுத்த மின்கம்பி எந்த நேரத்திலும் தண்ணீர் அரிப்பால் சாய்ந்து சாளையில் விழலாம் என்ற காரணத்தினாலும், நேப்பியர் பாலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

செய்தி க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment