கருணாநிதியின் பேனா போட்ட கையெழுத்தால்தான் கொங்கு வேளாளர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்” என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா பேசினார்.
இதற்குப் கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சி ஆறுமுகம் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அண்ணாமலை ஆடு மேய்த்துகொண்டு இருப்பார், வானதி சீனிவாசன் கூடை பின்னிகிட்டு இருப்பார் என பேசுகிறார்" ராசா'வின் தனிப்பட்ட அரசியல் விமர்சனத்துக்காக ஒட்டு மொத்த கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தையும் ஒப்பிட்டு பேசுவதும், ஆடு மேய்ப்பதும், வெள்ளமண்டி நடத்துவதும், வேளாண்மை செய்வதும் தரம் தாழ்ந்ததாக நினைத்து பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கொங்கு வேளாளர் சமூகம் சங்க காலம் தொட்டு வேளாண்மையை குல தொழிலாக கொண்டு - காட்டை திருத்தி காணி ஆக்கி, ஆற்று நீர் மேலாண்மை செய்து, ஏர் உழுது, விதைத்து ,அறுவடை செய்து உணவு உற்பத்தி செய்யும் மகத்தான பணியை செய்து வாழ்ந்து வருகின்றனர்.
மனிதன் வேட்டை தொழிலில் இருந்து மாறி வேளாண்மை செய்ய தொடங்கிய இடத்தையே நாகரீக வளர்ச்சி ஏற்பட்டது. கொங்கு வேளாளர்கள் தமிழ் இனத்தின் வேளாண் நாகரீக வளர்ச்சிக்கு காரணமாக விளங்க கூடியவர்கள்.
மேலும், இன்னும் பல சமூகங்கள் இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் பங்கிட்டு கொள்கின்றனர். இட ஒதுக்கீட்டை மட்டுமே நம்பி பிழைக்கும் சமூகமாக கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆ ராசா நீலகிரி தனித்தொகுதியில் நின்றுதான் வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு கவுண்டர் சமூக மக்களும் வாக்களித்து இருப்பார்கள்.
ஆ. ராசா இதுபோன்ற சமூக அவமதிப்பு பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அவர் தனது கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
இதுமட்டுமின்றி, திமுக தலைமை ராசாவின் பேச்சை ஊக்கப்படுத்தும் பட்சத்தில் கொங்கு மண்டலத்தில் திமுக வாக்கு வங்கி சிதையும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“