கொங்கு மண்டல விவசாய நிலங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பினர் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள் கூறியதாவது: “கோவை - சக்தி பசுமை வழிசாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இந்த திட்டத்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். விவசாய நிலங்கள் எடுக்கப்பட்டால் 70 சதவீத விவசாயிகள் பாதிக்கபடுவர் என்றும் சுற்று சூழலும் பாதிக்கப்படும் என்றனர். விவசாய நிலத்தை எடுக்காமல் அறிவியல் முன்னேற்றத்தை பயன்படுத்தி மாற்று வழிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
மாவட்ட திட்ட குழு, சாலை பாதுகாப்பு குழுவில் விவசாயிகள் யாரும் இல்லை என்பது வருத்தம் அளிப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்து விவசாய சங்க பிரதிநிதிகளை குழுவில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
நகரத்தில் பொது போக்குவரத்து மெட்ரோ, பாலங்கள் இருப்பது போல் கிராமத்திற்கு விரிவுப்படுத்த கடைப்பிடிக்க வேண்டும் என்றனர்.
கர்நாடாக உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு திட்டங்களை செயல்படுத்துவது போலவே தமிழகத்திலும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
5 ஆண்டுகளுக்கு முன்பு பசுமைவழிச் சாலைக்கு எந்த ஒரு முன்னேறிவிப்பும் இல்லாமல் விவசாய நிலத்தை அளவீடு செய்ததாகவும் விவசாயம் அழியும் பட்சத்தில் அந்த சாலை தேவை இல்லை என அப்போதைய அரசாங்கம் நிறுத்தி வைத்தனர் என்று கூறிய அவர்கள் இப்போது தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றி நான்கு வருடமாக விவசாயிக்கு தொந்தரவு செய்து வருகின்றனர் என கூறினர். இருக்க கூடிய பழைய சாலையையே விரிவுப்படுத்தவதற்கு போதுமான இடம் உள்ளதாகவும் இது பசுமைவழிச் சாலை அல்ல பசுமை அழிப்பு சாலை என சாடினர்.
தொழில் அதிபர்கள் வாங்கி போட்டுள்ள பண்ணை வீடுகளுக்கு விரைவாக சென்று வர வேண்டும் என திட்டமிடுகின்றனர் என்றும், சுங்க சாவடி அமைத்து மக்கள் பணத்தை சுரண்டுவதற்கு இந்த தேவையில்லாத திட்டம் என்றும் சாடினர். இந்த பசுமைவழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டால் விவசாயிகள் பலர் உயிர்களை மாய்த்து கொள்வோம் என தெரிவித்தனர்.
இந்தக் கூட்டமைப்பில் இந்த பிரச்சனை சம்பந்தமாக கொங்கு மண்டலத்தில் பசுமை வழி சாலை திட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது, விவசாய நிலங்களின் பரப்பளவை குறைக்காத நிலையான உள்கட்ட அமைப்பு மேம்பாடு, பசுமை வழி திட்டங்களுக்கு உள்ள சுய ஆதாயத்தினரை விழிப்புணர்வுகள் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.