விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாப்பட்டி கிராமம் ரீல்ஸ் மூலம் திடீரென இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. "மன அழுத்தமா? விடுமுறையைக் கொண்டாட வேண்டுமா? கூமாப்பட்டிக்கு வாங்க... கூமாப்பட்டி ஒரு தனி தீவு... இந்த ஊரின் தண்ணீர் மூலிகை தண்ணீர்..." என்று இளைஞர் பேசும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
இந்த வீடியோக்களைப் பார்த்த பலரும், கூமாப்பட்டி எங்கிருக்கிறது என்று கூகுள் மேப்பில் தேடி, அந்த இடத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கூமாப்பட்டி பிளவக்கல் அணை பகுதியில் பொதுமக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி இல்லை என்றும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து ஏமாற வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளங்களின் பிளவக்கல் அணை நீரில் குளிப்பது போன்ற வீடியோ வெளியான நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.