scorecardresearch

கொசஸ்தலை ஆற்றை நாசம் செய்யும் ‘காக்கா ஆழி’ சிற்பிகள்: அரசு நடவடிக்கை எடுக்குமா?

புதன்கிழமை சுமார் 130 மீனவர்கள் இச்சிற்பியை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

mussels

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் பரவிவரும் ‘காக்கா ஆழி’ சிற்பிகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து விளைகிறது.

இதைப்பற்றி உள்ளூர் மீனவர்கள் எச்சரித்தும், தமிழக அரசு அதற்கேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் எண்ணூர் சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள ஏராளமான மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை 130 மீனவர்கள் இச்சிற்பியை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, கடுமையாக பாதிக்கப்பட்ட மீன்பிடி தளங்களில் ஒன்றான கருக்குமரம்-கடச்செடி பாடு (மீன்பிடி தளம்)ல் இருந்து காக்கா ஆழி சிற்பிகளை அகற்றினர்.

படகுகள் ஆற்றில் பயணிக்க, ஆற்றின் நடுப்பகுதியில் சுமார் 7 அடி அகலம் மற்றும் 50 அடி நீளத்திற்கு இருக்கும் இடங்களில் ஆக்கிரமித்த சிற்பிகளை அகற்றினர். முதல் நாள் காட்டுக்குப்பம் பகுதி மக்களும், இரண்டாம் நாள் முகத்துவாரகுப்பத்தைச் சேர்ந்தவர்களும் இப்பணியை மேற்கொண்டனர்.

டிசம்பரில் எண்ணூர் மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் சேர்ந்து, பத்திரிகையாளர்களைச் சந்தித்து, கடல்வாழ் உயிரினங்களை பாதிக்கும் சிற்பிகளின் ஆக்கிரமிப்பை குறித்து எச்சரிக்கை எழுப்பினர். மேலும் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதற்கிடையில், இதுபோன்ற சுற்றுசூழலை பாதிக்கும் உயிரினங்களை அகற்ற ஆற்றின் ஒரு பகுதியை ஆழப்படுத்துவதற்கான ஆய்வை நீர்வளத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஆனால், தூர்வாரும் பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kosasthalaiyar charru mussels fishermen requests tn government to take action