ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொழில் அதிபர் கமலேஷ் என்பவரது வீட்டில் நுழைந்து வீட்டில் இருப்பவர்களை கட்டி போட்டு பணம், நகை கொள்ளை.
பட்டப் பகலில் வீட்டுக்குள் நுழைந்த 10-க்கும் மேற்பட்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்து துணிகரம். சம்பவ இடத்தில் ஆர் .எஸ் புரம் போலீசார் நேரில் விசாரணை. அப்பகுதியில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிலதிபர் கமலேஷ் பஞ்சு தொடர்பான தொழில் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கமலேஷ் வீட்டில் இல்லாத சூழலில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.
13 லட்சம் பணம் மற்றும் ஏராளமான நகை கொள்ளை போயி உள்ளது . பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“