/indian-express-tamil/media/media_files/9DlrBcNPulmcYK5v9fm0.jpeg)
கோவை வெல்பர் அசோசியேஷன்
எம்.எல்.எம் இண்டஸ்ட்ரிக்கு தனி சட்டம், தனி அமைச்சகம், நல வாரியம் அமைத்திட மத்திய மாநில அரசுகளுக்கு ஆல் இந்தியா நெட்வொர்க் வெல்பர் அசோசியேஷன் கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஆல் இந்தியா நெட்வொர்க் வெல்பர் அசோசியேஷன் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது இதன் தலைவர் மனோகரன் கேரளா, ஆந்திரா மாநிலங்களில் உள்ளது போது எம்.எல்.எம் தொழிலுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசுகையில், ஆல் இந்தியா நெட்வொர்க் வெல்பர் அசோசியேசன் 14 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் சுமார் 40 லட்சம் பேர் உறுப்பினர்கள் உள்ளனர். மக்களை ஏமாற்றும் எம்.எல்.எம் கம்பெனிகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்திவருகின்றன. சில எம்.எல்.எம் நிறுவனங்கள் முறையாக மத்திய, மாநில அரசுகளிடம் முறையாக அங்கீகாரம் பெற்று டி.டி.எஸ், ஜி.எஸ்.டி போன்றவற்றை முறையாக செலுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்து வருகின்றது.
இதனால் இந்தியா முழுவதும் படித்த பட்டதாரிகள் மற்றும் பொதுமக்கள் முழு நேரமாக 5 கோடி பேருக்கும், பகுதி நேர வேலை வாய்ப்பாக சுமார் 12 கோடி பேருக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்துள்ளது.
ஆகவே எம்.எல்.எம் இண்டஸ்ட்ரியைக்கு தனி சட்டம், தனி அமைச்சகம், நல வாரியம் அமைத்து நலத்திட்ட உதவிகளை அரசு வழங்க வேண்டும். கடன் உதவி, சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டி மத்திய, மாநில அரசு பலமுறை கோரிக்கையை வலியுறுத்தியும் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை.
ஆனால் கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் எம்.எல்.எம்.தொழிலுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளிடம் முறையான அனுமதி பெறாமல் சிலர் போலியான இணையதளங்களை வைத்து பல மடங்கு வட்டி தருவதாக அப்பாவி மக்களை ஏமாற்றி வருதாக தெரிவித்தார்.
எம்.எல்.எம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட போலி இணையதளங்களின் செயலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக போலி இணையதளங்களை முடக்க கோரி மத்திய மாநில அரசையும், காவல் துறையும் வலியுறுத்தி வருகிறோம்.
பாதிக்கப்பட்ட முகவர்கள், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசாரங்கள் கொடுத்து உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தி, சட்ட ஆலோசனை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டப்பூர்வமாக உதவிகள் மற்றும் ஆலோசனை வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.