கோவை உக்கடம் ரேஸ்மா கார்டன் பகுதியை சேர்ந்தவர் நாசர் (47) ஆட்டோ டிரைவராக உள்ளார். நேற்று டீசலுடன் மாநகராட்சி அலுவலக விக்டோரியா ஹால் அருகேயுள்ள சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்து மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த நாசர் டீசலை தன் மீது ஊற்றியபடி, மேயர் அறையை நோக்கி ஓடியுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/d5d8bb28-8a4.jpg)
தொடர்ந்து தீயை பற்ற வைக்கவும் முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்து, உக்கடம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் மாநகராட்சி அலுவலகத்திற்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (30.11.2023) தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்ததாக கோவை மாநகராட்சி உதவி பொறியாளர் ஜீவராஜ் (58) உக்கடம் போலீசில் புகார் அளித்ததன் பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாசரை சிறையில் அடைத்தனர்.
/indian-express-tamil/media/post_attachments/b8dc6b2e-6e9.jpg)
நாசர் அவர் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் வேண்டி பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில் அதன் காரணமாக இவ்வாறு செய்திருக்கிறார் என்று கூறப்படுகின்றது.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“