பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கைது! லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, லஞ்ச ஒழிப்புத்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உள்ள பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் பணி நியமனத்திற்கு சுரேஷ் என்பவரிடம் ரூ.30 லட்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து துணைவேந்தரின் வீடு மற்றும் பல்கலைக்கழகத்தில் உள்ள அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர்.

லஞ்சம் வாங்கியது உறுதியானதால் துணைவேந்தர் கணபதி, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அந்த பணத்தை ரூ.1 லட்சம் ரொக்கப் பணமாகவும், மீதமுள்ள பணத்தை செக் மூலமாகவும் கணபதி பெற்றுக்கொண்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக கணபதி கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் பொறுப்பேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close