Advertisment

யானை தாக்கி செங்கல் சூளை தொழிலாளி படுகாயம்; கோவையில் அதிர்ச்சி

கோவையில் யானை தாக்கி செங்கல் சூளை தொழிலாளி படுகாயம்; யானைகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kovai worker

கோவையில் யானை தாக்கி செங்கல் சூளை தொழிலாளி படுகாயம்; யானைகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஈஸ்வரன் - விமலா தம்பதியினர். கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் ஈஸ்வரன் செங்கல் சூளையில் மண் கலக்கி கொண்டு இருந்தார். அப்பொழுது திடீரென அங்கு வந்த இரண்டு காட்டு யானைகள் அதில் ஆண் காட்டு யானை ஈஸ்வரனை தாக்கியது. உடனே அருகில் இருந்த சக தொழிலாளிகள் சத்தம் போட்டு யானைகளை துரத்தினர்.

இதையும் படியுங்கள்: பள்ளியின் பூட்டுகள், தண்ணீர் தொட்டிகளில் மலம் தடவப்பட்ட விவகாரம்; 2 மாணவர்கள் மீது போலீசார் சந்தேகம்

இதில் ஈஸ்வரனுக்கு வலது கால் முறிவு ஏற்பட்டது. இது குறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஈஸ்வரனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment
Advertisement
publive-image

இதுகுறித்து செங்கல் சூளையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தகவலாக கூறியதாவது; அடிக்கடி யானைகள் அப்பகுதிகளுக்கு வருகின்றன, எனவே அதனை தடுத்து நிறுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மலை பகுதி ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் அமைத்து உள்ள அகழிகள் சரி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு யானைகள் வருவதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore Elephant Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment