Advertisment

சிமென்ட் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும்; பில்டர்ஸ் அசோசியேஷன் வலியுறுத்தல்

சிமென்டிற்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்; பில்டர்ஸ் அசோசியேஷன் வலியுறுத்தல்

author-image
WebDesk
New Update
Kovai Builders Association

கோவை பில்டர்ஸ் அசோசியேஷன்

செபி, டிராய், ரேரா போன்று சிமென்ட் ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை ஏற்படுத்த பாராளுமன்ற நிலைக்குழு அறிவுத்தியுள்ளதை இந்திய அரசு உடனடியாக அமல் செய்ய வேண்டும் என இந்திய கட்டுனர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளது.

Advertisment

இந்திய கட்டுனர் சங்கம் பி.ஏ.ஐ. சார்பாக பொதுக்குழு கூட்டம் கோவையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கட்டுனர் சங்கம் தேசிய மாநில நிர்வாகிகள் மற்றும் தேசிய தலைவர் நரசிம்ம ரெட்டி, மாநில தலைவர் ஐயப்பன், ஒருங்கிணைப்பு தலைவர் விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் கூறியதாவது;

இதையும் படியுங்கள்: கோவையில் அரை மணி நேர மழைக்கே வெள்ளக்காடாக மாறிய தடாகம் சாலை; வாகன ஓட்டிகள் அவதி

பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் கம்பெனிகள் முதலியவைகளை உள்ளடக்கிய அகில இந்திய நிறுவனமாகும். கட்டுமான துறையை மேம்படுத்துவதற்காகவும் அதற்கான அரசு அளவிலான கொள்கைளை வழிவகுக்கவும் இந்த அமைப்பு உதவி வருகின்றது.

ஒற்றைச்சாளர முறை பின்பற்றினால், ஒரே இடத்தில் அனைத்து அதிகாரிகளையும் டெவலப்பர்ஸ் சந்தித்து பேசி பயன்பெற முடியும். வாடிக்கையாளர்களின் பணம், நேரம், தேவையற்ற மன அழுத்தம் மற்றும் காலவிரையத்தை தவிர்க்க ஒற்றைச்சாளர முறை உதவியாக இருக்கும்.

அரசின் தேசிய நெடுஞ்சாலைகள், அரசின் மாநில நெடுஞ்சாலைகள், மின்சார திட்டங்கள், தொழிற்சாலை திட்டங்கள் உள்ளிட்ட 15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள், சுற்றுச் சூழல் அல்லது வன அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.

மேலும் பல அடுக்குகளைக் கொண்ட இந்த அமைச்சகத்தால், திட்டங்கள் தாமதமாவதுடன் திட்ட மதிப்பீடும் உயர்ந்து வருகிறது. அனைத்து திட்டங்களுக்கும் ஒற்றைச்சாளர முறையை பின்பற்றினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மத்திய அரசின் விமான நிலையம், துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கட்டுமான பணிகளுக்கென 120 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால், தற்போதைய நிலையில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், திட்டங்களை தாமதப்படுத்தி வருகின்றன. திட்டங்களை ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கும் முன் நிலத்தை அரசு கையகப்படுத்தி தர வேண்டும். ஒப்பந்ததாரர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தும் நிலை ஏற்படக் கூடாது.

எந்த ஒரு கட்டுமான பணிக்கும் மிக அவசியமானது சிமென்ட். லாபநோக்கத்திற்காக, நியாயமற்ற வணிக முறையை சிமென்ட் உற்பத்தியாளர்கள் கையாண்டு வருகின்றனர். எனவே செபி, டிராய், ரேரா போன்று, சிமென்ட் ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை ஏற்படுத்த பாராளுமன்ற நிலைக்குழு அறிவுத்தியுள்ளதை இந்திய அரசு உடனடியாக அமல் செய்ய வேண்டும்.

சிமென்டிற்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும் தற்போது 12.5 சதவீதம் எதிர்வாத வரியாகவும், ஒவ்வொரு டன்னுக்கும் சிறப்பு வரியாக 125 ரூபாயும், கூடுதல் சிறப்பு வரியாக எதிர்வாத வரியில் 4 சதவீதம் மற்றும் 3 சதவீதம் செஸ் ஆகவும் விதிக்கப்பட்டுள்ளது. சிமென்ட் இறக்குமதி செய்ய வரி விலக்கு அளித்தால், இந்திய சிமென்ட் உற்பத்தியாளர்களுக்கு விலை நிர்ணயம் செய்வதில் கட்டுப்பாடு ஏற்படும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒப்பந்ததாரர்கள் கோர்ட்டுகளில் தங்களுக்கு சாதகமாக பெற்ற ஒரு லட்சம் கோடிக்கும் மேலான தொகையையும், அரசின் பல்வேறு பிரச்னைகளால், உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகளில் உள்ளன.

இந்தியாவின் ஒப்பந்த விதிமுறைகள், உலக வங்கி நிதியுதவி திட்டத்தின்படி ஒப்பந்த விதிமுறைகளை மற்ற திட்டங்களுக்கும் செயல் வேண்டும். இந்திய கட்டுனர்கள் சங்கத்துடன் இணைந்து, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கட்டுமான தொழிலாளர்களுக்கான பயிற்சியளிக்க வேண்டும்.

கட்டுமான தொழிலாளர்களின் திறன் மேம்பாட்டிற்கென, இந்திய கட்டுனர்கள் சங்கம், இந்திய கட்டுமான தொழில்திறன் மேம்பாட்டு கவுன்சில் ஒன்றை அமைத்துள்ளது. தொழிலாளர்களின் திறன் மேம்பாட்டிற்காக குறைந்தபட்சம் 20 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மேலும் நிறுவனங்களின் சமுதாய பொறுப்பக்கான நிதியிலிருந்தும் கட்டுமான தொழிலாளர்களின் திறனை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒப்பந்ததார்கள், அடுத்த முறை கடன் வாங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு இந்த விதிமுறையை பரிசீலனை செய்து மறுவரையறை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment