கோவை உக்கடம் பகுதியில் நடந்த காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில், உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23) ஜி.எம்.நகர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/IMG_20221025_234347.jpg)
இதையும் படியுங்கள்: கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த விவகாரம்: 5 பேர் மீது உபா சட்டம் பாய்ந்தது
கைது செய்யப்பட்ட அனைவரும் கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, கோவை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜெ.எம். 2 இல் நீதிபதி செந்தில் ராஜா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/IMG_20221025_234550.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/10/IMG_20221025_234333.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/10/IMG_20221025_234153.jpg)
விசாரணக்குப் பிறகு 5 பேருக்கு 8.11.2022 வரை நீதிமன்ற காவலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil