கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் தொடர்புடைய மாவோயிஸ்ட் கோவை மாவட்ட கருமத்தம்பட்டி பகுதியில் பதுங்கி இருப்பதாக க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு கேரளா போலீசார், க்யூப் பிரிவு போலீசார் இணைந்து கருமத்தம்பட்டியில் ஒரு கடையில் பதுங்கி இருந்த மாவோயிஸ்ட்களை சுற்றி வளைத்தனர். இதில் அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் இயக்க தலைவர் ரூபேஸ், அவரது மனைவி சைனா அனூப் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பொழுது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைது செய்யப்பட்ட இவர்கள் மீது கேரளாவில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் மாவோயிஸ்ட் அனூப் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் வழக்கு ஒன்றில் ஆஜர் படுத்துவதற்காக கடந்த மாதம் அனூப் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்பொழுது அவர் அடைக்கப்பட்டு இருந்த அறைக்குள் நுழைந்து போலீசார் அங்கு இருந்த புத்தகங்கள் உள்ளிட்டவற்றை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மாவோயிஸ்ட் அனூப் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்து உள்ளார். புகார் மனுவை சிறையினர் நீதிமன்றத்திற்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்து உள்ளதாக கூறப்படுகின்றது.இதனை கண்டித்து கடந்த சில நாட்களாக அனூப் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.
இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் மாவோயிஸ்ட் அனூப் தங்களிடம் புகார் மனு எதுவும் தரவில்லை என்றும், அவர் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட வில்லை என சிறைத்துறையினர் தகவலாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“