மாற்றுத் திறனாளிகள் நலத்திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்ற கோல்ப் விளையாட்டு போட்டியில் “புரோ வி24” அணி 19 புள்ளிகள் பெற்று வெற்றிபெற்றது.
கடந்த 57 ஆண்டுகளாக பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் “செர்சியர்" (CHERSHIRE) மாற்றுத் திறனாளிகள் அறக்கட்டளை கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச சிகிச்சை பயிற்சிகள் வழங்கி வருகின்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/c6844e7f-ceb.jpg)
இந்நிலையில் கோவையில் உள்ள 66 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ நிதி திரட்டும் வகையில் “செர்சியர் மாற்றுத்திறனாளி அறக்கட்டளை” மற்றும் கோயமுத்தூர் கோல்ப் கிளப் இணைந்து “சேரிட்டி டோரன்மென்ட்“ (நன்கொடை தொடர்) என்ற பெயரில் கோல்ப் போட்டிகள் நடைபெற்றது.
இதில் 96 பேர் 4 அணிகளாக கலந்து கொண்டனர். இதில் “புரோ வி24” அணி 19 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து கோப்பையை கைப்பற்றியது. டஸ்காட்டிக்ஸ் அணி 18 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தது.
/indian-express-tamil/media/post_attachments/b0df82e4-53d.jpg)
இது குறித்து செர்சியர் அறக்கட்டளையின் அகில இந்திய தலைவர் தனலட்சுமி கூறியதாவது; மாற்றுத் திறனாளிகளில் குறிப்பாக முதுகுத்தண்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான நாற்காலிகள் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளையும் இலவசமாக செய்து வருகிறோம்.
கோல்ப் கிளப் உறுப்பினர்கள் பெரும்பாலும் தொழிலதிபர்கள், கல்வி நிறுவன தலைவர்களாக உள்ளதால் அவர்களிடம் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக செய்து வரும் சேவைகள் குறித்து தெரிவிக்கவும், அவர்கள் மூலம் உதவி தேவைப்படும் மாற்று திறனாளிக்கு உதவி புரியவும் இந்த போட்டியை முதல் முறையாக கோவையில் நடத்தி உள்ளோம் என்று தெரிவித்தார்.
/indian-express-tamil/media/post_attachments/9aa64f00-4c2.jpg)
மேலும் இந்த போட்டிகள் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்த பணிகளுக்கு நிதி திரட்டுவதாகவும், இதே போல ஒவ்வொரு ஆண்டும் சேரிட்டி கோப்பை கோல்ப் போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“