Advertisment

மக்களவை தேர்தல்; கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி துவக்கம்

கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி துவக்கம்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு

author-image
WebDesk
New Update
Kovai voting machine

கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி துவக்கம்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவையில் முதல் நிலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் துவங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisment
publive-image

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பணிகள் துவங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் முதல் நிலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் இன்று முதல் துவங்கியுள்ளது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள 17160 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணியினை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

publive-image

இதையும் படியுங்கள்: வானதி ஸ்ரீனிவாசன் மீது புகார்: திமுக பெண்களை தவறாக சித்தரித்து பேசியதால் சர்ச்சை

publive-image

மேலும் இப்பணிகளை ஆய்வு செய்ய, டெல்லியில் இருந்து ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவும் வந்துள்ளது. இந்த பணிகளில் ஏதேனும் இயந்திர கோளாறுகள் இருந்தால் அவை சரிசெய்யப்படும். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குணசேகரன், வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன், தெற்கு வட்டாட்சியர் விஜயலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் ஒரு பிரதிநிதி உடன் இருந்தார்.

publive-image
publive-image

இப்பணிகள் 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முழுவதும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. கூடுதலாக பாதுகாப்பு பணிக்காக காவலர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Election Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment