சென்னை தெருக்களை சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்ற கோவையிலிருந்து 41 எச்.பி. திறன் கொண்ட மோட்டார்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
குறிப்பாக தனியார் நிறுவனங்களிடம் இருந்து முதற்கட்டமாக நேற்று 41 எச்.பி திறன் கொண்ட ஆறு ராட்சத மோட்டார்கள் மற்றும் 10 சிறு மோட்டார்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் கூடுதல் மோட்டார்கள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது எனவும், இந்த ராட்சச மோட்டார்கள் 32 கிலோ வாட் திறனுடன் வேகமாக தண்ணீரை வெளியேற்றும் உடையவை என்றும், இந்த ஆறு மோட்டார்கள் ஏற்றுமதிக்காக தயாராக இருந்த நிலையில் மாநகராட்சி ஆணையாளரின் நடவடிக்கையால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் கோவை மாநகராட்சி தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கடந்த இரண்டு வருடங்களாக சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையராகவும் பணிபுரிந்துள்ளார். மழை நீர் வடிகால் வெள்ளம் தடுப்பு மீட்பு பணிகளில் கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு அனுபவம் உள்ள காரணத்தினால், அவர் நேற்று மதியம் சென்னைக்கு விரைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“