குறைந்த விலையில் பட்டாசு விற்பதாக மோசடி செய்யும் சைபர் க்ரைம் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்க கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
தீபாவளி காலத்தில் பட்டாசுகளுக்கான தேவை அதிகரிப்பதால் இதை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் போலி இணையதளங்களை உருவாக்கி நம்பமுடியாத விலையில் பட்டாசுகளை வழங்குவதாக உறுதியளித்து மோசடி செய்கின்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/920d5773-b45.jpg)
இதில் ஆசை வார்த்தையை நம்பி வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள https://luckycrackers.com/ என்ற இணையதளத்திற்குச் சென்று ஆர்டர் செய்து, பணம் செலுத்தப்பட்டவுடன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்ட தொடர்பு எண் மற்றும் இணையதளம் அணுக முடியாததாகிவிட்டதை பாதிக்கப்பட்டவர்கள் உணர்கிறார்கள். கடந்த 1 மாதத்தில் இந்த மோசடி தொடர்பாக மொத்தம் 25 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இது போன்ற மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சைபர் கிரைம் கூடுதல் காவல்துறை இயக்குநர் சஞ்சய் குமார் கூறுவதாவது; நீங்கள் வாங்கும் இணையதளத்தின் சட்டபூர்வமான தன்மையை எப்போதும் சரிபார்க்கவும். வாடிக்கையாளர் மதிப்புரைகளைப் பார்க்கவும். அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்ணுக்கான லேண்ட்லைன் எண் இணையதளத்தில் உள்ளதா எனச் சரிபார்த்து பாதுகாப்பானதா என உறுதிசெய்யவும் என பல அறிவுரைகளை கூறியுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/777b57c8-f83.jpg)
மேலும் இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும், எனவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை கோவை மாநகர சைபர் க்ரைம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“