ஜமேஷா முபின் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் ஏற்படவே இல்லை: மாமியார் கூறும் தகவல்கள்

முபினுக்கு வெளியில் நண்பர்கள் இருக்கிறார். ஆனால் அவர்களை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்ததில்லை.

முபினுக்கு வெளியில் நண்பர்கள் இருக்கிறார். ஆனால் அவர்களை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்ததில்லை.

author-image
WebDesk
New Update
ஜமேஷா முபின் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் ஏற்படவே இல்லை: மாமியார் கூறும் தகவல்கள்

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்

Advertisment

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் மரணமடைந்தார். தற்போது இந்த வழக்கை என.ஐ.ஏ விசாரணை நடத்தி வரும் நிலையில், ஜமேஷா முபின் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் ஏற்படவே இல்லை என்று அவரது மாமியார் குர்சித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவர் கூறுகையில்,

முபின்  எல்லோரையும் போல் நார்மலாக இருக்க கூடியவர் கடைசி வரைக்கும் எங்களுக்கும் முபினின் மீது எந்த தவறான செய்திகளையும் வந்ததில்லை. மதத்தில் மேல் ஈடுபாடுடையவர். தினமும் ஐந்து முறை தொழுவார். முபினுக்கு வெளியில் நண்பர்கள் இருக்கிறார். ஆனால் அவர்களை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்ததில்லை.

Advertisment
Advertisements

ஆதரவற்ற பெண்ணைத்தான் திருமண செய்ய நினைத்தவர் முபின். விசாரித்ததில் நல்ல பையன் என தெரிந்த பின்பு தான் எங்கள் மகளை திருமணம் செய்து கொடுத்தோம். பிள்ளைகளுடன் எனது மகள் அதிக நேரம் எங்கள் வீட்டிலேயே இருந்தார்.

முபின் ஒரு வருடத்திற்கு முன்பு தான் கண் அறுவைசிகிச்சை செய்தார். கடைக்கு போய்விட்டு வந்து வீட்டில் தொழுவார். இரண்டு வருடமாக எங்களுக்கு அருகில் தான் குடி வைத்திருந்தோம். கண் அறுவைசிகிச்சைக்கு பிறகு நெஞ்சுவலி வந்துவிட்டதால் புத்தக்கடைக்கு திறப்பதில்லை.

மதியத்திற்கு மேல் தேன் வியாபாரம் பழைய துணி வியாபாரம் தான் செய்கிறோம் என முபின் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். தங்களுக்கு முபினின் மீது எந்த சந்தேகமும் வரவில்லை.எந்த நேரமும் செல்போன் பார்த்து படித்துக் கொண்டிருப்பார். எந்த ஜமாத்துடனும் இணைந்ததில்லை.

காசு பணத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத எளிமையானவர் முபின் திருமணம் உள்ளிட்ட விழாக்களை புறக்கணிப்பதோடு ஆடம்பரங்களை விரும்பாதவர். குழந்தைகளுடன் நன்றாக பழகுவார். இருந்தாலும் கலகலப்பாக இல்லாமல் எந்நேரமும் படித்துக் கொண்டும்  ஓதிக்கொண்டிருக்கும் முபினால் அடிக்கடி கணவன் மனைவியிடையே சண்டை ஏற்படும். அப்போது சமரசம் செய்து வைத்துள்ளோம்.

கார் வாங்கியது யாருக்கும் தெரியாது. கார் ஓட்டி பழகுவதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார். நெஞ்சுவலிக்கு ஹிஜாமா செய்வதற்காக இரு முறை திருச்சூர் சென்றிருக்கிறார். சுமை தூக்கமுடியாததால் புத்தக கடைக்கு செல்லாமல் கார் ஓட்டி பழகுவதாக தெரிவித்துள்ளார்.

மதியத்திற்கு மேல் தேன் கடைக்கு செல்வதால் வேதிப்பொருட்களை நாட்டு மருந்துகள் என கூறியதோடு விற்பனைக்காக வைத்திருந்த்தாக தெரிவித்துள்ளார். இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பே வியாழக்கிழமை தனது மனைவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகவும் கூறி மனைவி மற்றும் குழந்தைகளை மாமனார் வீட்டில் விட்டு சென்றுள்ளார்  என தெரிவித்தார் ஜமேஷா முபின் மாமியார் குர்ஷித்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: